வைக்கோலை மாடு மேய்ந்ததால் மூதாட்டி அடித்து கொலை

by Editor / 10-10-2022 11:20:00pm
 வைக்கோலை மாடு மேய்ந்ததால் மூதாட்டி அடித்து கொலை

சிவகங்கை மாவட்டம், நாட்டரசன்கோட்டை அருகே காராம்பட்டி கிராமத்தில் கருப்பையா என்பவரது வைக்கோல் படப்பில்  லெட்சுமி என்பவரது மாடு மேய்ந்ததாக கூறப்படுகிறது. வைக்கோல் படப்பில்  மாட்டை மேய விட்டதால் லெட்சுமிக்கும்  கருப்பையாவுக்கும் வாய்த்தகராறு எற்பட்டதில் கருப்பையா  மூதாட்டி லெட்சுமியை கம்பியால் தாக்கியதில் மூதாட்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உடன் வந்த  ஆண்டிச்சி என்ற  மூதாட்டியையும்  கருப்பையா  கம்பியால் தாக்கியதில் படுகாயம் அடைந்தார். மூதாட்டியை அடித்து கொலைசெய்த கருப்பையா தப்பி ஓட்டம்,தப்பி ஓடிய கருப்பையாவை சிவகங்கை தாலுகா காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.காயம்பட்ட மற்றொரு முத்தாற்றி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

Tags :

Share via

More stories

Logo