கர்மவினைகள்(பாவங்கள்)தீர அமாவாசை பரிகாரம்

by Editor / 30-01-2022 11:02:31pm
கர்மவினைகள்(பாவங்கள்)தீர அமாவாசை பரிகாரம்

இதுவரை நீங்கள் செய்த பாவங்கள் அனைத்தும் நீங்க அமாவாசை இரவு வீட்டு வாசலில் இதை செய்ய மறக்காதீர்கள்!
ஒவ்வொரு அமாவாசை நாட்களிலும் பிரபஞ்சத்தில் நல்ல அதிர்வலைகள் உச்சத்தில் இருக்கும் என்று சொல்வார்கள். இன்று((அமாவாசை தினத்தில்)) நாம் செய்யும் ஒவ்வொரு விஷயமும் எளிதாக பலிதமாகும். அமாவாசை தினங்களில் திருஷ்டி கழிப்பது, பரிகாரம் செய்வது போன்ற விஷயங்கள் செய்யும் பொழுது அதற்குரிய பலன்கள் மேலும் இரட்டிப்பாக்கும். இந்த விஷயத்தை நாம் செய்து விட்டு அன்று இரவு தூங்கச் சென்றால் நாம் இதுவரை செய்த பாவங்கள் அனைத்தும் கழியும்? அப்படி நாம் என்ன செய்ய வேண்டும்? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை படியுங்கள்.

கர்மவினை நீங்க நாம் எவ்வளவோ பரிகாரங்களும், புனஸ்காரங்கள், பூஜையும் செய்து இருப்போம். ஆனால் பாவங்கள் நீங்குவதற்கு எளிதாக சாஸ்திரங்கள் ஒரு பரிகாரத்தை சொல்லி கொடுக்கிறது. """அன்றைய காலத்தில் இவற்றை எல்லாம் நம் முன்னோர்கள் சரியாக//முறையாக பின்பற்றி வந்தார்கள்"". ஆனால் இப்போது இருக்கும் அவசர காலகட்டத்தில் அதனை பின்பற்ற மறுத்து  மறந்து வருகின்றனர். இந்த எளிய விஷயங்களைச் செய்தாலே நம் வீட்டில் எந்த விதமான திருஷ்டிகளும், கெட்ட சக்திகள் அண்டாமல் இருக்கும் நமது அடுத்த சந்ததிக்கும்//நமது அடுத்த பிறவிக்கும் ""பித்ரு தோஷம்"" இல்லாமல் கர்ம வினைகள் நீங்கும்

அமாவாசை தினத்தில் தவறாமல் பித்ரு தர்ப்பணம் செய்ய வேண்டும். கோவிலுக்கு சென்று தர்ப்பணம் செய்ய முடியாதவர்கள் வீட்டிலேயே எளிதாக செய்து கொள்ளலாம். ""இன்றைய நாளில் கட்டாயம் முன்னோர்களுக்கும் எள்ளும், தண்ணீரும் இறைத்து வீட்டிலேயே தர்ப்பணம் செய்யும் ஆண்கள் மட்டும் வழிபட வேண்டும்"". மேலும் பசு மாடுகளுக்கு அகத்திக் கீரை கொடுப்பது, வெல்லமும், பச்சரிசியும் கலந்து தானம் கொடுப்பது போன்ற விஷயங்களை செய்யும் பொழுதும் பித்ரு தோஷம் நீங்கும். திருஷ்டி கழிப்பதற்கு ஒவ்வொரு அமாவாசையிலும் எலுமிச்சை பழத்தை இரண்டாக வெட்டி அதில் குங்குமம் தடவி நிலைவாசல் பகுதியில் வைக்க வேண்டும். பின்னர் காய்ந்ததும் அவற்றை அகற்றி கால் படாத இடத்தில் தூக்கி போட்டு விடலாம். இதனால் வீட்டிற்குள் வரும் கெட்ட சக்திகள் தடுத்து நிறுத்தப்படும்.

அமாவாசையில் நீங்கள் குளிக்கும் பொழுது ""தண்ணீருடன் சிறிதளவு கல்லுப்பு, வேப்பிலை, மஞ்சள் சேர்த்து குளித்தால் உடலில் இருக்கும் தோஷங்கள் அத்தனையும் நீங்கும்."" முன்ஜென்ம பாவ வினைகளும், இந்த ஜென்மத்தில் நீங்கள் அறியாமல் செய்த பாவங்களும் களையப்படும். உப்பு தண்ணீர் கங்கைக்கு இணையானது. கடல் நீரில் குளிக்கும் பொழுது எப்படி தோஷங்கள் நீங்கி உடல் புத்துணர்ச்சி பெறுகிறதோ! அதே போல அமாவாசையில் இந்த குளியல் செய்யும் பொழுது நம்மிடம் இருக்கும் நெகட்டிவ் எனர்ஜிகள் அத்தனையும் வெளியேறும்

மேலும் நீங்கள் கோலம் போட கோலமாவு பயன்படுத்துவதை விட பச்சரிசி மாவு பயன்படுத்துவது மிகவும் சிறந்தது  பாவங்களைப் போக்கும். எந்த அளவிற்கு நீங்கள் எறும்புகளுக்கு தீனி போடுகிறீர்களோ, அந்த அளவிற்கு உங்களுடைய கர்மங்களும் குறையும் என்கிறது சாஸ்திரம். அந்த வகையில் அமாவாசை அன்று இரவு நீங்கள் தூங்க செல்வதற்கு முன்னர் வீட்டு வாசலில் ஒரு கைப்பிடி அளவு இருக்கும் வெல்லத்தை எடுத்துக் கொண்டு தூவி விடுங்கள். பின்னர் கதவை சாத்தி விட்டு படுக்கச் செல்லுங்கள். மறுநாள் காலையில் பார்க்கும் பொழுது வெல்லம் முழுக்க எறும்புகள் மொய்த்துக் கொண்டிருக்கும்

அமாவாசையில் இப்படி எறும்புகளுக்கு தானம் செய்தால் பாவங்கள் நீங்கி, கர்மங்கள் குறைந்து, வாழ்வில் இருக்கும் எல்லா பிரச்சினைகளும் தீரும். உங்களால் முடிந்தவர்களுக்கு((பசியில் உள்ளவர்களுக்கு)) அன்னதானம் செய்யுங்கள். தானத்தில் அன்னதானத்தை விட சிறந்தது எதுவுமில்லை என்று கூறலாம். அமாவாசையில் நீங்கள் செய்யும் தானத்திற்கும் பன்மடங்கு பலன் உண்டு. எனவே இயலாதவர்களுக்கு சாப்பாடு வாங்கிக் கொடுங்கள், எல்லா பாவங்களும் நீங்கப் பெறுங்கள்.
 

கர்மவினைகள்(பாவங்கள்)தீர அமாவாசை பரிகாரம்
 

Tags :

Share via