விராலிமலையில் வேலை வாங்கி தருவதாக பணம் மோசடி: கணவன் கைது - மனைவி மீது வழக்கு

by Admin / 14-08-2021 05:42:41pm
விராலிமலையில் வேலை வாங்கி தருவதாக பணம் மோசடி: கணவன் கைது - மனைவி மீது வழக்கு

 

விராலிமலையில் வேலை வாங்கி தருவதாக பணம் மோசடி செய்தவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை ஒன்றியம் புதுபட்டியை சேர்ந்தவர் ஆரோக்கியம் மகன் வேளாங்கண்ணி (38). இவரது மனைவிக்கு சத்துணவு துறையில் வேலை வாங்கி தருவதாக ரூ.6 லட்சத்தை, கடந்த 2019ம் ஆண்டு விராலிமலை தெற்குதெருவை சேர்ந்த ஜேசுராஜ் (36) மற்றும் இவரது மனைவி அனுசியா ஆகிய இருவரும் வாங்கி னார்களாம்.

ஆனால் இதுவரை வேலை வாங்கி தரவில்லையாம். இது குறித்து ஜேசுராஜ் மற்றும் அவரது மனைவி அனுசியாவிடம் பல முறை சென்று கேட்ட போது, அவர்கள் வேளாங் கண்ணியை மிரட்டினார்களாம்.

இதனால் மனம் விரக்தியடைந்த வேளாங்கண்ணி விராலிமலை போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் ஜேசுராஜ் மற்றும் அனுசியா ஆகிய இருவரின் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் விராலிமலை போலீசார் ஜேசுராஜை கைது செய்தனர்.

இதேபோல் வேலை வாங்கி தருவதாக கூறி ஏமாற்றியதாக போலீஸ் நிலையத்தில் 3 பெண்கள் புகார் மனு கொடுத்தனர்.

ஜேசுராஜின் மனைவி அனுசியா விராலிமலை ஒன்றியத்தில் அங்கன்வாடி பணியாளராக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via

More stories