மேற்கு வங்க ஆளுநருக்கு Z + பாதுகாப்பு

Z + பிரிவு பாதுகாப்பு வழங்கி மேற்கு வங்க ஆளுநர் ஆனந்த போஸுக்கு மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அவர் மீது தாக்குதல் நடத்த வாய்ப்பு உள்ளதாக உளவுத்துறையினர் மூலம் தகவல் வருவதால் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரியான போஸ், வங்காள ஆளுநராக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பொறுப்பேற்றார். அதற்கு முன், வங்காளத்தில் தேர்தலுக்குப் பிந்தைய வன்முறை தொடர்பாக நியமிக்கப்பட்ட விசாரணைக் குழுவில் அவர் உறுப்பினராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
Tags :