“முதல்வர் மற்றும் அமைச்சர்களுக்கு நன்றி” - திருமா

by Staff / 17-08-2024 03:03:48pm
“முதல்வர் மற்றும் அமைச்சர்களுக்கு நன்றி” - திருமா

விசிக தலைவர் திருமாவளவனின் இன்று (ஆக.17) தனது 62வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். தனது பிறந்தநாளையொட்டி முதலமைச்சர் ஸ்டாலினைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றார். இதுகுறித்து திருமாவளவன் தனது ‘X’ தளத்தில் கூறியதாவது, “ எனது பிறந்தநாளுக்கு வாழ்த்து கூறிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மூத்த அமைச்சர்கள் அண்ணன் துரைமுருகன், அண்ணன் பொன்முடி, எம்பி தயாநிதி மாறன் உள்ளிட்ட அனைவருக்கும் எனது மனம் நிறைந்த நன்றி” என குறிப்பிட்டுள்ளார்.

 

Tags :

Share via