நந்தா தேவி மற்றும் ஸ்வாலிக் கப்பல்கள் இந்தியா வந்தடைந்துள்ளன. இதனால்ஓரளவு தட்டுப்பாட்டை சமாளிக்க முடியும் .

by Admin / 20-03-2026 08:05:36am
நந்தா தேவி மற்றும் ஸ்வாலிக் கப்பல்கள் இந்தியா வந்தடைந்துள்ளன. இதனால்ஓரளவு தட்டுப்பாட்டை சமாளிக்க முடியும் .

போரின் காரணமாக ஹோர்முஸ் ஜல சந்தியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்தியாவுக்கு வந்து சேர வேண்டிய 3.2 லட்சம் டன் எல்.பி.ஜி கடலில் சிக்கி உள்ளதால் இந்திய சந்தையில்  எரிவாயு விநியோகத் தடை நீடிக்கிறது. வணிக ரீதியிலான எல்.பி.ஜி சிலிண்டர்களின் பற்றாக்குறையால் பல உணவகங்கள் மூடப்பட்டுள்ளன .சில இடங்களில் விறகு அடுப்புக்களுக்கு மாறி தங்கள் சேவைகளை செய்து கொண்டிருக்கின்றன. சுமோடோ ,சுவிக்கி போன்ற தளங்களின் சேவைகள் 50 இருந்து 60% வரை குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிகளிலும் கூட எரிவாயு சரியாக கிடைக்காததால் உணவு பட்டியல்கள் குறைக்கப்பட்டுள்ளன. தட்டுப்பாடு குறித்த அச்சத்தால் பொதுமக்கள் அதிகளவில் முன்பதிவு செய்வதால் எல்.பி.ஜி ஏஜென்சிகளில் நீண்ட வரிசைகள் காணப்படுகின்றன இதுவரை 8.8 மில்லியன் ஆர்டர்கள் பதிவாகியுள்ளன. வணிக ரீதியான எல்.பி.ஜி சிலிண்டர்களின் விலை மார்ச் மாதத்தில் சுமார் 8% உயர்ந்துள்ளது. சில இடங்களில் 1,700 ரூபாய்க்கு விற்கப்பட்ட சிலிண்டர்கள் தற்பொழுது 2,300 வரை விற்கப்படுகின்றன. வீட்டு உபயோக எல்.பி.ஜி விநியோகத்திற்கு முன்னுரிமை அளிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. உள்நாட்டு உற்பத்தியை 25 சதவீதம் வரை அதிகரிக்க எண்ணெய் நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஈரான் அரசு அனுமதி அளித்ததை தொடர்ந்து நந்தா தேவி மற்றும் ஸ்வாலிக் கப்பல்கள் இந்தியா வந்தடைந்துள்ளன. இதனால்ஓரளவு தட்டுப்பாட்டை சமாளிக்க முடியும் என்று சொல்லப்படுகிறது.

 

 

Tags :

Share via