பழனியில் மாருதி ஷோரூம் கண்ணாடி உடைத்து கார் திருடிய வழக்கில் 3 பேரை பிடித்து போலீசார் விசாரணை
திண்டுக்கல், பழனி IOT அருகே உள்ள PLA மாருதி ஷோரூம்- ன் கண்ணாடியை உடைத்து புதிய ஷிப்ட் கார் மற்றும் சிசிடிவி கேமராவின் ஹார்ட் டிஸ்களை மர்ம நபர்கள் திருடி சென்று காரை ஒட்டன்சத்திரம் அருகே நவாமரத்துப்பட்டி பகுதியில் டீசல் தீர்ந்து போனதால் காரை விட்டு சென்றனர்.இதுகுறித்து பழனி டிஎஸ்பி மேற்பார்வையில் ஆயக்குடி காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு மேற்படி சம்பவத்தில் ஈடுபட்ட ஆத்தூரை சேர்ந்த சிவக்குமார் என்பவரை கைது செய்தனர்.மேலும் இவ்வழக்கில் தொடர்புடைய பிரேம்குமார் மற்றும் சக்கரபாணி ஆகிய இரண்டு பேரை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
Tags : பழனியில் மாருதி ஷோரூம் கண்ணாடி உடைத்து கார் திருடிய வழக்கில் 3 பேரை பிடித்து போலீசார் விசாரணை