காவல்துறை விதித்த நிபந்தனைகளை தவெக ஏற்றது.

திருச்சி மரக்கடை பகுதியில் நடைபெறவுள்ள விஜய் பரப்புரைக்காக காவல்துறை விதித்த நிபந்தனைகளை தவெக ஏற்றுக்கொண்டுள்ளது. ஸ்டார் தியேட்டர், தமிழ்சங்கம் மற்றும் காந்தி மார்க்கெட் பகுதிகளில் தற்காலிக பார்க்கிங் அமைக்க தவெக ஒப்புதல் அளித்துள்ளது. விஜய்யின் பரப்புரை தொடர்பாக இன்று காலை 11 மணிக்கு தவெகவினர் காவல்துறை அதிகாரிகளை சந்திக்க உள்ளனர். வரும் 13ஆம் தேதி முதல் விஜய் பரப்புரையை தொடங்குகிறார்.
Tags : காவல்துறை விதித்த நிபந்தனைகளை தவெக ஏற்றது.