தற்கொலை தீர்வல்ல...

ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் 10ம் தேதி 'உலக தற்கொலை தடுப்பு தினம்' கடைபிடிக்கப்படுகிறது. கடந்த 2003ம் ஆண்டு முதல் உலகளவில் ஏற்படும் தற்கொலைகளை தடுக்கவும், அதற்கான தடுப்பு நடவடிக்கையை அர்ப்பணிப்புடன் முன்னெடுக்கவும் இந்நாள் சிறப்பிக்கப்பட்டு வருகிறது. உலகில், ஒரு வருடத்தில் 8,00,000 தற்கொலைகள் நிகழ்கின்றன என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? ஒவ்வொரு 40 நொடிகளில் நாம் ஒரு உயிரை தற்கொலையினால் இழக்கின்றோம். அந்த உயிர் ஒரு குழந்தையாகவோ, ஆசிரியராகவோ, மனைவியாகவோ இருக்கலாம். தற்கொலை முயற்சிகளோ அதை விட 25 மடங்கு அதிகமாக இருக்கின்றன என்கிறது ஆய்வு.சர்வதேச தற்கொலை தடுப்பு சங்கம், உலக சுகாதார அமைப்பு & உலக மனநல கூட்டமைப்பு இணைந்து உலக தற்கொலை தடுப்பு தினம் முன்னெடுக்கப்படுகிறது.
Tags : தற்கொலை தீர்வல்ல...