மீன்பிடிக்க சென்ற நபர் உயிரிழப்பு

by Staff / 02-11-2023 05:01:54pm
மீன்பிடிக்க சென்ற நபர் உயிரிழப்பு

ஆத்தூர் அருகே மீன் பிடிக்க சென்ற நபர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். சேலம் மாவட்டம் , ஆத்தூர் அருகே அப்பம்மசமுத்திரம் கிராமத்தில் வசித்து வருபவர் ஜெமினி (எ) விஜயகுமார் இவர் ரிக் வண்டியில் ட்ரில்லராக பணிபுரிந்து வருகிறார். மனைவி சங்கீதா இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் தற்போது விடுமுறை என்பதால் வீட்டிற்கு வந்துள்ளார். ஜெமினி (எ) விஜயகுமார் அப்பம்ம சமுத்திரம் செல்லும் வழியில் உள்ள மேம்பால அடியில் வசிஷ்ட நதியில் மீன்பிடிக்க சென்று உள்ளார். அப்போது நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார் இதுகுறித்து தகவல் இருந்து வந்த ஆத்தூர் போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

 

Tags :

Share via

More stories