3 ஆயிரம் பேரை பணி நீக்கம் செய்யும் மெட்டா நிறுவனம்.

by Editor / 09-02-2025 02:45:23pm
3 ஆயிரம் பேரை பணி நீக்கம் செய்யும் மெட்டா நிறுவனம்.

மெட்டா நிறுவனம், 3000 பேரை பணி நீக்கம் செய்யவுள்ள சம்பவம், ஊழியர்களை கலக்கத்தில் ஆழ்த்தி உள்ளது. ஆட்குறைப்பு நடவடிக்கையை, பிப்ரவரி 11ஆம் தேதி முதல் தொடங்கும் என அறிவிக்கப்பட்டது. இது குறித்த அறிவிப்பை மெட்டா நிறுவனத்தின் மனிதவள துணை தலைமை அதிகாரி ஜெனல் கேல் வெளியிட்டுள்ளார். அதில், “சுமார் 3,000 ஊழியர்கள் தங்களது வேலையை இழக்க உள்ளனர். ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி மற்றும் நெதர்லாந்து உள்ளிட்ட பல ஐரோப்பிய நாடுகளில் உள்ள ஊழியர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது” என்றார்.

 

Tags : 3 ஆயிரம் பேரை பணி நீக்கம் செய்யும் மெட்டா நிறுவனம்.

Share via