கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழப்பு: முதல்வர் நிவாரணம் அறிவிப்பு

by Staff / 15-05-2023 02:35:33pm
கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழப்பு: முதல்வர் நிவாரணம் அறிவிப்பு

விழுப்புரம் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்த 3 பேர் குடும்பத்தினருக்கு தலா ரூ. 10 லட்சம் நிதியுதவி வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: கள்ளச்சாராயம், போதைப் பொருட்களை முற்றிலும் ஒழிக்க அரசு கடும்நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், விழுப்புரம் மாவட்டத்தில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் வேதனை அளிக்கிறது இப்பகுதியை சேர்ந்த ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் 4 பேர் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். கள்ளச்சாராயம் விற்ற அமரன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். மரக்காணம் அருகே எக்கியார் குப்பத்தில் கள்ளச்சாராயம் அருந்தியதால் உயிரிழந்த 3 பேர் குடும்பத்தினருக்கு தலா ரூ. 10 லட்சமும், சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ரூ. 50 ஆயிரமும் முதல்வர் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். முதல்வர் நிவாரணம் அறிவித்த பிறகு, உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

 

Tags :

Share via

More stories