ஈரானில் நிலவும் சூழலை கருத்தில் கொண்டு இந்திய குடிமக்கள் அங்கு செல்வதை தவிர்க்குமாறு அறிவுறுத்தல்

by Admin / 06-01-2026 08:19:48am
ஈரானில் நிலவும் சூழலை கருத்தில் கொண்டு இந்திய குடிமக்கள் அங்கு செல்வதை தவிர்க்குமாறு அறிவுறுத்தல்

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் ஈரானில் நிலவும் தற்போதைய பாதுகாப்பற்ற சூழலை கருத்தில் கொண்டு இந்திய குடிமக்கள் அங்கு செல்வதை தவிர்க்குமாறு அறிவுறுத்தி உள்ளது. இந்திய மக்கள் மறு உத்தரவு வரும் வரை ஈரானுக்கு அத்தியாவசியமற்ற பயணங்களை மேற்கொள்வதை தவிர்க்குமாறும், தற்போது ஈரானில் தங்கியிருக்கும் இந்தியர்கள் உடனடியாக அங்குள்ள இந்திய தூதரகத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள். உள்ளூர் இந்திய தூதரகத்துடன்தொடா்பில் இருக்குமாறு வெளிவுறவுஅமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது..

 2026 ஜனவரி நிலவரப்படி ஈரானில் விலைவாசி உயர்வு மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு எதிராக மக்கள் போராட்டங்களை கையில் எடுத்துள்ளனர். ஈரானிய நாணயமான ரியால் மதிப்பு வரலாறு காணாதவீழ்ச்சியையை சந்தித்துள்ளது. பண வீக்கம் 42 சதவீதத்தை தாண்டி உள்ளது. உணவுப் பொருள்களின் விலை 70 சதவீதத்திற்கும் மேல் அதிகரித்து உள்ளதால் போராட்டங்கள் தொடங்குவதற்கு முக்கிய காரணமாகும். தலைநகர் டெக்ரானில் தொடங்கிய இப்போராட்டம் தற்பொழுது 31 மாகாணங்களில் 26க்கும் மேற்பட்ட மாகாணங்களில் உள்ள 220 க்கும் மேற்பட்ட இடங்களுக்கு பரவி உள்ளன. போராட்டக்காரர்களுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே ஏற்பட்ட மோதல்களில் இதுவரை நாலு குழந்தைகள் உள்பட குறைந்தது 35 பேர் உயிரிழந்து உள்ளதாக மனித உரிமை அமைப்புகள் தெரிவிக்கின்றன சுமார் 1200க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். போராட்டங்களில் ஈடுபட்டு உள்ளவர்களை கழக காரர்கள் என்று அழைத்துள்ள ஈரான் அரசு அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்த போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளதோடு வன்முறை தொடர்ந்தால் ஈரான் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என எச்சரித்துள்ளார். இந்தியாவின் வெளிவரவு அமைச்சகம் இந்திய குடிமக்கள் ஈரானுக்கு தேவையற்ற பயணங்களை தவிர்க்குமாறும் வேண்டி உள்ளது. கடந்த 2022 இல் நடந்த மஹ்ஸா அமினி போராட்டங்களுக்குப் பிறகு ஈரானில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய மக்கள் எழுச்சியாக இது கருதப்படுகிறது.

ஈரானில் நிலவும் சூழலை கருத்தில் கொண்டு இந்திய குடிமக்கள் அங்கு செல்வதை தவிர்க்குமாறு அறிவுறுத்தல்
 

Tags :

Share via

More stories