சோஹோ  நிறுவனத்தின் தலைவர் ஸ்ரீதர் வேம்புவை சந்தித்தசெங்கோட்டையன்..? 

by Editor / 06-04-2025 10:32:17pm
சோஹோ  நிறுவனத்தின் தலைவர் ஸ்ரீதர் வேம்புவை சந்தித்தசெங்கோட்டையன்..? 

அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், அண்மைக் காலமாக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியுடன் மோதல் போக்கைக் கடைப்பிடித்து வருகிறார். நேற்று அவர் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்தார். இந்த நிலையில், இன்று காலை தூத்துக்குடி விமான நிலையம் வந்த அவர், அங்கிருந்து கார் மூலமாக தென்காசி மாவட்டம்  சிவசைலம் சென்ற அவரை அங்குள்ள கோயிலில் வழிபட்ட அவர்,பிரபல மென்பொருள்நிறுவனமான சோஹோ  நிறுவனத்தின் தலைவர் ஸ்ரீதர் வேம்புவை சந்தித்து பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தச் சந்திப்பின்போது, தென்காசி மாவட்ட பா.ஜ.க தலைவர் ஆனந்தன் அய்யாசாமி உடனிருந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

Tags : சோஹோ  நிறுவனத்தின் தலைவர் ஸ்ரீதர் வேம்புவை சந்தித்தசெங்கோட்டையன்..? 

Share via