பித்ரு தோஷம் நீங்கும் மகாளய அமாவாசை முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து சிறப்பு வழிபாடு.

மகாளய அமாவாசை தினத்தை முன்னிட்டு தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதற்காக ஏராளமான பொதுமக்கள் தற்போது நாட்டிலுள்ள புண்ணிய ஸ்தலங்களில் மட்டுமின்றி அகத்தியரால் வழிப்பாடு செய்யப்பட குற்றாலம் பகுதியில் உள்ள அருவிகளில் குவிந்து வருகின்றனர்.
குறிப்பாக, புரட்டாசி, ஆடி, தை உள்ளிட்ட மாதங்களில் வரும் அமாவாசை தினத்தன்று தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து அவர்களுக்கு பிடித்த உணவை படைத்து வழிபடுவது வழக்கம்.
அந்த வகையில், புரட்டாசி மாதம் வரும் மகாளய அமாவாசையானது பித்ரு தோஷம் நீக்கும் மிக சிறப்பான அமாவாசை என்பதால், இந்த புரட்டாசி மாதத்தில் வரும் மஹாளய அமாவாசை தினத்தன்று தங்களது முன்னோர்களை வழிபடுவதன் மூலம் பித்ரு தோஷம் நீங்கி இன்றைய தினம் தாங்கள் வேண்டுவது உடனடியாக நடக்கும் என்பதால் ஏராளமானோர் குற்றாலம் பகுதியில் உள்ள அருவிகள் புனித நீராடி அருவிக்கரையில் வைத்து எள்ளும், எண்ணையும் இரைத்து தங்களது . படையலிட்டு தர்ப்பணம் கொடுத்து வருகின்றனர்.
இதேபோல், தென்காசி மாவட்டத்தில் உள்ள மற்ற நீர்நிலைகளிலும் புரட்டாசி மாத அமாவாசை தினத்தை முன்னிட்டு தர்ப்பணம் கொடுப்பதற்காக ஏராளமானோர் குவிந்து வருவதால் அனைத்து நீர் நிலைகளிலுமே பொதுமக்கள் கூட்டம் என்பது அளவுக்கு அதிகமாக காணப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
Tags : பித்ரு தோஷம் நீங்கும் மகாளய அமாவாசை முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து சிறப்பு வழிபாடு.