வாஞ்சி இயக்கம் அறிவிப்பு காரணமாக மறைந்த முன்னாள் முதலமைச்சர் படத்தை இடம்பெறச்செய்தனர்
தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் அமைந்துள்ள வீர வாஞ்சிநாதன் மணிமண்டத்தில் மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியினுடைய படம் இடம்பெறுவதற்கு பலமுறை மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும்,தனது கடிதங்களுக்கு,நினைவுட்டு கடிதங்களுக்கும் ஆட்சியர் எந்தவிதமான பதிலும் அளிக்க வில்லையெனவும் வாஞ்சி இயக்கத்தினுடைய நிறுவனத் தலைவர் ராமநாதன் மாவட்ட ஆட்சியர் மீது குற்றச்சாட்டு தெரிவித்த நிலையில் வரும் 17.05.22 அன்று திட்டமிட்டபடி வீரவாஞ்சிநாதன் மணிமண்டபத்தில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் படத்தை இடம்பெறச் செய்ய போவதாக அறிவித்திருந்த நிலையில் நேற்று 9ஆம் தேதி இரவு அவசர அவசரமாக செய்தித்துறை பணியாளர்கள் வீரவாஞ்சிநாதன் மணிமண்டபத்தில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் படத்தையும் ,தற்போதைய முதல்வர் படத்தையும் இடம்பெறச்செய்தனர்.
Tags :