அதிமுக பொதுக்குழு கூட்டம் எடப்பாடி பழனிசாமிக்கு வழிநெடுகிலும் உற்சாக வரவேற்பு

அதிமுக பொதுக்குழு கூட்டம் இன்று காலை 9.15 மணிக்கு நடைபெற உள்ளது. இன்று காலை 9 மணிக்கு சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு அறிவிக்கப்பட உள்ள நிலையில் அந்த தீர்ப்பை பொறுத்தே அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறுமா? நடைபெறாதா? என்பது தெரியும். இந்நிலையில் அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்க தனது இல்லத்தில் இருந்து எடப்பாடி பழனிசாமி புறப்பட்டார். சென்னை பசுமைவழி சாலையில் உள்ள தனது இல்லத்திலிருந்து காலை 6.45 மணியளவில் பொதுக்குழுவில் பங்கேற்க எடப்பாடி பழனிசாமி புறப்பட்டார். கடந்த பொதுக்குழு கூட்டத்திற்கு காரில் சென்ற எடப்பாடி பழனிசாமி இன்று தேர்தல் பரப்புரை வாகனத்தில் பொதுக்குழு கூட்டத்திற்கு சென்றுகொண்டிருக்கிறார். வீட்டில் இருந்து புறப்பட்ட எடப்பாடி பழனிசாமிக்கு வழிநெடுகிலும் அதிமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர்.கரகாட்டத்துடன் களைகட்டும் பொதுக்குழுகூட்டம் அதிமுக கொடியுடன் குதிரையில் நின்று தொண்டர்களுக்கு சிறப்பான வரவேற்பு காலையில் இட்லி பொங்கல் வடை தற்போது விநியோகப்பட்டு தொண்டர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றது.
Tags : Edappadi Palaniswami received enthusiastic welcome at AIADMK general meeting