ஓ.பி.எஸ். மேல்முறையீட்டு மனு தள்ளுபடி

by Staff / 11-01-2024 12:14:30pm
ஓ.பி.எஸ். மேல்முறையீட்டு மனு தள்ளுபடி

அதிமுக கட்சி பெயர், கொடி, சின்னம் உள்ளிட்டவற்றை பயன்படுத்த விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டது. அதிமுக கொடி, சின்னம், லட்டர்பேட் உள்ளிட்டவற்றை ஓ.பன்னீர்செல்வம் பயன்படுத்த தடை விதித்தது செல்லும் என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த வழக்கை இன்று நீதிபதிகள் மகாதேவன், முகமது சபீக் அமர்வு தள்ளுபடி செய்துள்ளது. இதனால் ஓ.பன்னீர்செல்வம் தரப்புக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.ஓ.பன்னீர்செல்வம், தங்கள் கட்சி விதிகளுக்கு மாறாக தொண்டர்களையும், மக்களையும் குழப்பும் வகையில், அதிமுக கொடி, லட்டர்பேட், சின்னம் ஆகியவற்றை பயன்படுத்தி வருவதாகவும், இதற்கு தடை விதிக்கக் கோரி அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வழக்கு தொடர்ந்திருந்தார்.

 

Tags :

Share via
Logo