மதுரை கோட்டத்தில் பல்வேறு ரயில்வே திட்டங்கள் நிறைவேற்றம்

by Editor / 07-06-2022 07:17:05pm
மதுரை கோட்டத்தில் பல்வேறு ரயில்வே திட்டங்கள் நிறைவேற்றம்

மதுரை கோட்டத்தில் கடந்த எட்டு ஆண்டுகளில் பல்வேறு ரயில்வே திட்டங்கள் விரைவாக நிறைவேற்றப்பட்டுள்ளன. கடந்த எட்டு ஆண்டுகளில் மதுரை - தேனி செங்கோட்டை- ஆரியங்காவு உட்பட 94 கிலோ மீட்டர் ரயில் பாதையை அகல ரயில் பாதையாக மாற்றப்பட்டுள்ளது. திருச்சி - திண்டுக்கல், திருமங்கலம் - திருநெல்வேலி, வாஞ்சி மணியாச்சி - மீளவிட்டான் ரயில் பாதை திட்டங்கள் உட்பட 282 கிலோ மீட்டர் ரயில் பாதை இரட்டை ரயில் பாதைகளாக மாற்றப்பட்டு உள்ளது. மேலும் விருதுநகர் - திருநெல்வேலி, வாஞ்சி மணியாச்சி - தூத்துக்குடி, மதுரை - மானாமதுரை,  மானாமதுரை - ராமநாதபுரம், திருச்சி - காரைக்குடி, பழனி - பொள்ளாச்சி, மானாமதுரை - விருதுநகர் உட்பட 410 கிலோ மீட்டர் ரயில் பாதை மின்மயமாக்கப்பட்டுள்ளது. ரயில் பாதை மின்மயமாக்கல் திட்டம்  சுற்றுச்சூழலுக்கு உகந்த, விரைவான ரயில் போக்குவரத்தை உறுதி செய்கிறது. 2023 ஆம் ஆண்டிற்குள் இந்திய ரயில்வேயில் உள்ள அனைத்து ரயில் பாதைகளும் மின்மயமாக்கப்பட்டு விடும். தெற்கு ரயில்வேயில் இதுவரை 82 சதவீத ரயில் பாதைகள் மின் மயமாக்கப்பட்டுவிட்டது. தமிழகத்தில் கடந்த 8 ஆண்டுகளில் 1664 கிலோ மீட்டர் ரயில் பாதை மின் மயமாக்கப்பட்டுள்ளது.

 

Tags : Implementation of various railway projects in Madurai division

Share via