முதல்வர் விழுப்புரம் பயணம்

by Staff / 15-05-2023 12:54:48pm
முதல்வர் விழுப்புரம் பயணம்

கள்ளச்சாராய விவகாரம் தமிழகத்தில் விஸ்வரூபம் எடுத்த நிலையில் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்கள் இன்று பிற்பகல் விழுப்புரம் செல்கிறார். விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தோர் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ள நிலையில், 7 அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். இதனை தொடர்ந்து டிஜிபி சைலேந்தர் பாபு தமிழகம் முழுக்க சோதனை நடத்த அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். கள்ளச்சாராயம் அருந்தி பல பேர் உயிரிழந்த நிலையில் இன்னும் சிலர் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது

 

Tags :

Share via