உள்ளாடைக்குள் தங்கம் கடத்திய இருவர் கைது

ஷார்ஜாவில் இருந்து கோவை விமான நிலையத்திற்கு வந்த விமானத்தில் தங்கம் கடத்துவதாக புலனாய்வுத் துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. கோவை விமான நிலையத்தில் சந்தேகத்தின் அடிப்படையில் சில பயணிகளை சோதனை செய்தனர். புதுக்கோட்டையை சேர்ந்த ஜியாவுதீன் மற்றும் சென்னை சேக் முகமது ஆகியோர் உள்ளாடைக்குள் மறைத்து வைத்து தங்கம் கடத்தி வந்தது கண்டுபிடிக்க பட்டது. 1.90 கோடி ரூபாய் மதிப்புள்ள 3 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் தங்ம் கடத்தி வந்த 2 பேரை காவல் துறை கைது செய்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
Tags :