பெற்றோர் இல்லாத குழந்தைகளுக்கு மாதம் ரூ.2,000

by Editor / 14-03-2025 12:29:56pm
பெற்றோர் இல்லாத குழந்தைகளுக்கு மாதம் ரூ.2,000

பெற்றோரை இழந்து உறவினர்களிடம் வளரும் 50 ஆயிரம் குழந்தைகளுக்கு 18 வயது நிரம்பும் வரை படிப்பை தொடரும் நோக்கில் மாதந்தோறும் தாயுமானவர் திட்டத்தின்கீழ் மாதம் ரூ.2,000 உதவித்தொகை அளிக்கப்படும் என தமிழக பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார். 14 வயது சிறுமிகளுக்கு கருப்பை புற்றுநோய் தடுப்பூசி செலுத்த படிப்படியாக நடவடிக்கை எடுக்கப்படும். புற்றுநோயை தொடக்க நிலையிலேயே கண்டறியும் கருவிகள் ரூ.110 கோடி செலவில் வாங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

 

Tags :

Share via