அதிவேகத்தில் சென்ற கார்..பைக்கில் சென்ற 3 பேர் சம்பவ இடத்திலேயே பலி

குஜராத் மாநிலம் கரேலிபாக் பகுதியில் உள்ள அம்ரபாலி வளாகம் அருகே நபிரா என்ற இளைஞர் தனது நண்பருடன் காரில் சென்றுகொண்டிருந்தார். அதிவேகத்தில் சென்ற அவர், சாலையில் சென்ற மற்ற வாகனங்கள் மீது வேகமாக மோதிவிட்டுச் சென்றுள்ளார். இந்த விபத்தில், பைக்கில் சென்ற 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தொடர்ந்து காரைவிட்டு இறங்கிய நபிரா, சத்தம்போட்ட படி அங்கிருந்து நைசாக தப்பிக்க முயன்றார். அவரை அப்பகுதியினர் மடக்கிய நிலையில், “நிகிதா மேரி... அங்கிள்.... ஓம் நம சிவாய” என கோஷமிட்டார்.
Tags :