இமாச்சலில் கடும் வெள்ளப்பெருக்கு

by Staff / 09-07-2023 03:51:44pm
இமாச்சலில் கடும் வெள்ளப்பெருக்கு பருவ மலை தொடங்கியுள்ள நிலையில், வடமாநிலங்களில் பல்வேறு இடங்களில் கனமழை மிரட்டி வருகிறது. அந்த வகையில், இமாச்சல பிரதேசம், உத்தரகாண்ட், ஜம்மு காஷ்மீர், ராஜஸ்தான், ஹரியானா, சண்டிகர், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால், நிலச்சரிவு மற்றும் திடீர் வெள்ளப் பெருக்கு காரணமாக சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. பல்வேறு பகுதிகளில் வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளதால் மக்கள் கடும் அவதியடைந்துள்ளனர். குறிப்பாக, இமாச்சலில் பியாஸ் நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வீடுகள் மற்றும் நெடுஞ்சாலை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன.<br /> &nbsp;
 

Tags :

Share via

More stories