ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.249.80
பாகிஸ்தானில் பொருளாதார நெருக்கடி காரணமாக, எரிபொருள் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. பெட்ரோல், டீசல் விலையை லிட்டருக்கு ரூ.35 உயர்த்தி அரசு அறிவித்துள்ளது. இதனால், ஒரு லிட்டர் அதிவேக டீசல் விலை ரூ.262.80 ஆகவும், பெட்ரோல் விலை ரூ.249.80 ஆகவும் உயர்ந்துள்ளது. ஒரு லிட்டர் மண்ணெண்ணெய் ரூ.189.83. கடந்த வாரத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு 11 சதவீதம் குறைந்துள்ளது. டாலர் பரிமாற்றத்தில் அந்நாட்டின் கரன்சியின் மதிப்பு 272.உள்ளது.
Tags :