நடிகர் மாஸ்டர் பரத்தின் தாயார் மாரடைப்பால் காலமானார்

பஞ்சதந்திரம், போக்கிரி, சிறுத்தை, உத்தமபுத்திரன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளவர் 'மாஸ்டர்' பரத். இவர் தெலுங்கிலும் பிரபல நடிகராக உள்ளார். பரத்தின் தாயார் கமலாசினி சென்னையில் வசித்து வந்த நிலையில் சில நாட்களாகவே உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் கமலாசினி மாரடைப்பால் நேற்று இரவு காலமானதாக அவர் குடும்பத்தார் தெரிவித்தனர். இதையடுத்து மாஸ்டர் பரத்துக்கு ரசிகர்கள் ஆறுதல் கூறி வருகின்றனர்.
Tags :