மழையால் ரத்தான போட்டி.. டிக்கெட் கட்டணத்தை திருப்பி தரும் RCB
ஐபிஎல் தொடரில் கடந்த மே17ஆம் தேதி பெங்களூரு - கொல்கத்தா அணிகளுக்கு இடையிலான போட்டி மழையால் ரத்தானது. இந்த நிலையில் அதற்கான டிக்கெட் கட்டணத்தை, ரசிகர்கள் திரும்ப பெற்றுக்கொள்ளலாம் என பெங்களூரு அணி நிர்வாகம் எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளது. அதில், “ஆன்லைனில் டிக்கெட் வாங்கியவர்களுக்கு அவர்களது கணக்கில் 10 வேலை நாள்களுக்குள் பணம் திருப்பியளிக்கப்படும். நேரடியாக டிக்கெட் வாங்கியவர்கள் அவர்களது டிக்கெட்டினை காட்டி கட்டணத்தை திரும்ப பெற்றுக் கொள்ளலாம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags :


















