குஜராத்தில் பாஜக மாபெரும் வெற்றி பெறும்

by Staff / 30-11-2022 02:19:03pm
குஜராத்தில் பாஜக மாபெரும் வெற்றி பெறும்

குஜராத்தில் பாஜக மாபெரும் வெற்றி பெறும் என்று ஹர்திக் படேல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பட்டிதார் சமுதாயத்தின் இளம் தலைவரான ஹர்திக் படேல் கூறுகையில், இம்முறை குஜராத் மாநிலத்தில் 150க்கும் மேற்பட்ட இடங்களில் பாஜக வெற்றி பெறும். குஜராத் மக்களுக்காக நான் பாஜகவில் இணைந்தேன். மேலும், கடந்த தேர்தலில் இருந்த நிலை இல்லை, இந்த முறை பா.ஜ., எளிதில் வெற்றி பெறும். குஜராத்தில் ஆம் ஆத்மிக்கு இடமில்லை. கடவுள் நம்பிக்கை இல்லாத ஆம் ஆத்மி கட்சியினரை குஜராத்திகள் நம்ப மாட்டார்கள். மேலும், ஆம் ஆத்மி கட்சியில் சேரும் சில படேல் போராட்ட தலைவர்களின் முடிவு முற்றிலும் தனிப்பட்டது என்று ஹர்திக் படேல் கூறினார்.குஜராத்தில் இரண்டு கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. டிசம்பர் 1 மற்றும் 5 ஆகிய தேதிகளில் வாக்குப்பதிவு நடைபெறும். குஜராத் சட்டப் பேரவையில் 182 உறுப்பினர்கள் உள்ளனர். முதற்கட்டமாக 89 தொகுதிகளுக்கு 788 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

 

Tags :

Share via