மருத்துவமனையில் மாயமான சிறுமி... போலீஸ் அதிரடி

by Staff / 03-10-2022 01:20:39pm
மருத்துவமனையில் மாயமான சிறுமி... போலீஸ் அதிரடி

சென்னை சூளைமேட்டில் உள்ள பெண்கள் விடுதியில் தங்கியிருந்த சிறுமி ஒருவர் உடல்நிலை சரியில்லாமல் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர் அந்த சிறுமி திடீரென காணாமல் போனதாக தெரிகிறது. இதுகுறித்து விடுதி ஊழியர்கள் காவல் நிலையத்தில் புகாரளித்தனர். புகாரின் போலீசார் சிறுமியை தீவிரமாக தேடினர். மேலும், காணாமல் போன சிறுமி சமூக வலைதள வீடியோக்ள் மூலம் பிரபலமான மற்றொரு பெண்ணுடன் எண்ணூர் சுனாமி குடியிருப்பில் இருப்பது தெரியவந்தது. அச்சிறுமியின் இன்ஸ்டிராகிராம் பக்கம் மூலம் இதனை கண்டுபிடித்த போலீசார் அச்சிறுமியை மீட்டு அறிவுரை கூறி தந்தையிடம் பாதுகாப்பாக ஒப்படைத்தனர். நண்பர்களுடன் சேர்ந்து ரீல்ஸ் வீடியோ வெளியிட அச்சிறுமி மருத்துவமனையில் இருந்து சென்றது விசாரணையில் தெரியவந்தது.

 

Tags :

Share via

More stories