13.5 கிலோ தங்க நகைகள் கையாடல்

by Staff / 03-10-2022 01:30:46pm
13.5 கிலோ தங்க நகைகள் கையாடல்

பெங்களூருவில் உள்ள அன்மோல் ஜுவல்லரியில் இருந்து கோவையில் இருக்கும் நகைக்கடைகளுக்கு நகைகள் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. அவ்வாறு நகைகளை வினியோகம் செய்யும் பணியில் அன்மோல் ஜுவல்லரி ஊழியர் அனுமன் துவேசி பல ஆண்டுகளாக செய்து வந்துள்ளார். இந்நிலையில், அவர் 13.5 கிலோ எடையுள்ள ரூ.6.5 கோடி மதிப்பிலான தங்கம் கையாடல் செய்ததாக வெரைட்டி ஹால் காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் கொண்டு வந்த தங்கத்தில் 13.5 கிலோ நகைகளை கையாடல் செய்ததாக அனுமன் மீது புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோவை வெரைட்டி ஹால் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via