இன்று   அம்ரிப் பால் சிங் பஞ்சாப் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

by Admin / 23-04-2023 11:32:36am
 இன்று   அம்ரிப்  பால் சிங் பஞ்சாப் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பஞ்சாப் மாநிலத்தை இரண்டாகப் பிரித்துகாலிஸ்தான் எனும் தனி நாடு அமைக்க வேண்டும் என்று அம்ரிப் பால் சிங் தலைமையில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் தனிநாடு கோரிக்கையை நீண்ட காலமாக வைத்துபோராட்டம் நடத்தி வரும் சூழலில் சமீபத்தில் அம்ரித் பால் சிங் தனது ஆதரவாளர்களுடன் காவல் நிலையத்தை தாக்கி தம் தீவிரவாத போக்கை வெளிப்படுத்தினர். இதனை தொடர்ந்து கடந்த மார்ச் 18 ஆம் தேதி முதல் அம்பரீத் சிங் பாலை கைது செய்ய போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் அவர் நேபாளத்திற்கு தப்பி சென்று விட்டதாக கருதி அவரை பல்வேறு இடங்களில் போலீசார் தேடி வந்த நிலையில், அவர் சரணடைந்ததாக செய்திகள் வெளியாகி உள்ளன. 37 நாட்களுக்குப் பிறகு இன்று  அமிர்ப் பால் சிங் பஞ்சாப் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

Tags :

Share via

More stories

Logo