ஐந்து முதல்வர்களுடனும்  பணியாற்றிய நடிகை ராஜசுலோசனா

by Editor / 14-08-2021 08:55:25pm
ஐந்து முதல்வர்களுடனும்   பணியாற்றிய நடிகை ராஜசுலோசனா

ராஜசுலோசனா 1935 ஆம் ஆண்டில் சித்தூரில் பிறந்தார். திரைப்பட நடிகர் மற்றும் இயக்குனரான சி.எஸ்.ராவ் என்பவரை மணந்தார். 17 வயதில் நடிக்க வந்த இவர் 1953-ல் குணசாகரி என்ற கன்னடப் படத்தில் அறிமுகமாகி தமிழில் சத்யசோதனை படம் மூலம் தமிழுக்கு அறிமுகமானார். தொடர்ந்து பெண்ணரசி, ரங்கூன் ராதா, அம்பிகாபதி, உள்பட சுமார் 250க்கும் மேற்பட்ட படங்களில் கதாநாயகியாகவும், குணசித்திர, வில்லி வேடங்களிலும் நடித்திருக்கிறார்.

அரசிளங்குமரி, படித்தால் மட்டும் போதுமா , வணங்காமுடி போன்றவை இவருக்குப் பெரும் புகழைத் தேடித் தந்த திரைப்படங்கள் ஆகும். கடைசியாக எங்க வீட்டு வேலன் திரைப்படத்தில் நடித்தார்.

25 ஆண்டுகளுக்கு முன்னர் அமெரிக்காவிற்குப் புலம் பெயர்ந்தார். அமெரிக்காவில் இருந்தபோது நடன பள்ளிகள் நடத்தி வந்தார். பின்னர் மீண்டும் இந்தியா திரும்பி சென்னையில் "புஷ்பாஞ்சலி நிருத்ய கலாகேந்திரம்" என்னும் நாட்டியப் பள்ளியை துவக்கி நாட்டிய கலைஞர்களை உருவாக்கும் பணியில் ஈடுபட்டு வந்தார்.சிறுநீரக கோளாறால் அவதிப்பட்டு வந்த ராஜசுலோசனா சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு 2013 மார்ச் 5 காலையில் தனது 77வது அகவையில் காலமானார். இவருக்கு ஷியாம் சுந்தர், ஸ்ரீ, தேவி ஆகிய மூன்று பிள்ளைகள் உள்ளனர்இவரது கணவர் ராவ் காலமானார்.

வி ஜயவாடாவில். அம்மா தேவகி. அப்பா பக்தவசல நாயுடுவுக்கு ரயில்வேயில் பணி. தாத்தா காலத்திலேயே சென்னையில் குடியேறிய குடும்பம். வாய்ப்பாட்டு, வயலின் என்று ராஜசுலோசனாவுக்கு எட்டு வயதில் சப்தஸ்வரமும் பழக்கமானது. ஏவி.எம்.மின்வேதாள உலகம்படத்தில் லலிதா - பத்மினியின் நாட்டியத்தைப் பார்த்ததும், ஆடுவதில் ஆர்வம் அதிகரித்தது. மனம் விட்டு இசை ஆசிரியை பங்கஜத்திடம் அதைக் கூறினாள். ‘சரஸ்வதி கான நிலையம்ராஜசுலோசனாவுக்கு ஜதி சொல்லிற்று.

சீக்கிரத்திலேயே அரங்கேற்றம் கண்டார். ராஜசுலோசனாவின் முதல் பரத நாட்டிய நிகழ்வு உச்ச நீதிமன்ற நீதியரசர் பி.எல். வெங்கட்ராமஅய்யர் தலைமையில் நடந்தது. ராஜசுலோசனாவுடன் நடனம் பயின்ற மற்றொரு மாணவி, நடிகைதாம்பரம் லலிதா.’ எம்.சி. சி. மைதானத்தில் லலிதா நாட்டியக் குழுவினரின் நிகழ்ச்சி. நடன மாது ஒருவர் வரவில்லை. ராஜசுலோசனா தன் தோழிக்குக் கால் கொடுத்தார். பாம்பாட்டியாகவும் கிருஷ்ணராகவும் ஆடிப் பாடினார்.

அதை நேரில் கண்டு ரசித்தவர் கன்னட சினிமா இயக்குநர் சின்ஹா. ராஜசுலோசனாவை நடிக்கக் கூப்பிட்டார். வீட்டில் எதிர்ப்பு அணிவகுத்தது. ஆருடம் பார்த்தனர் பெற்றோர். ‘ஒப்பனை ஒளி வீசத் திரையில் மின்னுவார்என்றே அத்தனை பண்டிதரும் அடித்துச் சொன்னார்கள். ராஜசுலோசனாவின் முதல் படம் ஹொன்னப்ப பாகவதர்-பண்டரிபாய் நடிக்க, கன்னடத்தில்குணசாகரிஎனவும், தமிழில்சத்தியசோதனைஎனவும் தயாரானது. மிகச் சிறிய வேடம். நடனம் ஆடவும் முடிந்தது. .பி. நாகராஜனின்நால்வர்’, ‘மாங்கல்யம்ஆகியன ராஜசுலோசனாவைப் பரவலாக அறிமுகப்படுத்தின.

டி.ஆர். ராமண்ணாவின்குலேபகாவலியில் ராஜசுலோசனா முதன்முதலாக எம்.ஜி.ஆருடன் நடித்தார். அண்ணா, மு.கருணாநிதி, எம்.ஜி.ஆர்., என்.டி. ராமாராவ், ஜெயலலிதா என்று ஐந்து முதல்வர்களுடனும் பணியாற்றியவர் ராஜசுலோசனா

 

Tags :

Share via