ஆப்கானிஸ்தானில் பத்திரிகையாளர்கள் உட்பட 133 பேர் படுகொலை
ஆப்கானிஸ்தானில் சிறை பிடித்த பகுதிகளில் உள்ள மத பண்டிதர்கள், பழங்குடி இனத்தில் மூத்தவர்கள், சிவில் சொசைட்டி ஆர்வலர்கள், மனித உரிமை போராளிகள் மற்றும் பத்திரிகையாளர்கள், பெண்கள் என 33 பேரை தலிபான் பயங்கரவாதிகள் படுகொலை செய்துள்ளனர். மேலும் அப்பாவி மக்கள் 100 பேரையும் படுகொலை செய்திருப்பதாக ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
ஆப்கானிஸ்தான் நாட்டில் அரசுக்கு எதிரான போரில் ஈடுபட்டு வரும் தலிபான் பயங்கரவாதிகளை ஒடுக்கும் நோக்கில் செயல்பட்டு வந்த அமெரிக்க படையினர் வாபஸ் பெறப்பட்டு வருகின்றனர். இதனால், பல்வேறு பகுதிகளையும் தலிபான்கள் சிறை பிடித்து வருகின்றனர்.
கந்தகார் மாவட்டத்தை தன் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ள தலிபான்கள், அங்குள்ள குடியிருப்பு வாசிகளுக்கும், அரசுக்கும் இடையில் தொடர்பு இருப்பதாகச் சொல்லி அவர்களை சிறை பிடித்துள்ளது. அரசாங்க அதிகாரிகளின் உறவினர்களை, போலீஸ் மற்றும் ராணுவத்தில் பணிபுரிபவர்களை தலிபான் இயக்கத்தினர் ஈவு இரக்கமில்லாமல் கொன்றிருக்கிறார்கள் என்று மனித உரிமைகள் கழகம் கூறியுள்ளது.
300 க்கும் மேற்பட்ட கந்தகார் குடியிருப்புவாசிகளை தலிபான் இயக்கத்தினர் சிறை பிடித்து, ரகசிய இடத்தில் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர் என்று ஊடகங்கள் தகவலை வெளியிட்டுள்ளன.
கந்தகார் மாகாணத்தில் ஸ்பின் போல்டாக் மாவட்டத்தில் 100 க்கும் மேற்பட்டவர்களை துப்பாக்கி ஏந்திய தலிபான் இயக்கத்தினர் மிரட்டி, கொன்றிருப்பதாக ஒரு தகவல் கூறியது.
பொதுமக்களை தலிபான் இயக்கத்தினர் கொன்றிருப்பதை ஆப்கான் உள்துறை அமைச்சகம் உறுதி செய்திருக்கிறது. இந்த நிலையில், தலிபான் பயங்கரவாதிகள் சிறை பிடித்த பகுதிகளில் உள்ள 33 பேரை படுகொலை செய்து வெறிச்செயலில் ஈடுபட்டு உள்ளது. அவர்களில் மத பண்டிதர்கள், மூத்த பழங்குடியினர், சமூக ஆர்வலர்கள், பத்திரிகையாளர்கள், மனித உரிமை பாதுகாவர்கள் மற்றும் பெண் பத்திரிகையாளர்கள் ஆகியோரும் உள்ளனர். இதேபோன்று மாகாண அரசு அதிகாரிகள், போலீசார் மற்றும் ராணுவத்தினரின் குடும்ப உறவினர்களையும் சிறை பிடித்து அவர்களை தலிபான்கள் கொன்று உள்ளனர் என்ற அதிர்ச்சி செய்தியும் வெளிவந்துள்ளது.
Tags :