33 ஆண்டுகளாக சிறைவாசம் அனுபவித்து விடுதலையான ரவிச்சந்திரனுக்கு திருமணம்.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 33 ஆண்டுகளாக சிறைவாசம் அனுபவித்து விடுதலையான ரவிச்சந்திரனுக்கு 4 ஆம் தேதி திருமணம் நடந்து முடிந்துள்ளது. விருதுநகர் அருப்புகோட்டையைச் சேர்ந்த ரவிச்சந்திரன் 2022 நவம்பர் மாதம் விடுதலையானார். தொடர்ந்து அவர் மதுரை ஒத்தக்கடையில் பதிப்பகம் ஒன்றை நடத்தி வருகிறார். இதனிடையே அவருக்கு 4 ஆம் தேதி திருமணம் நடந்தது. இதில் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டும் கலந்துகொண்டனர்.
Tags : 33 ஆண்டுகளாக சிறைவாசம் அனுபவித்து விடுதலையான ரவிச்சந்திரனுக்கு நேற்று திருமணம்.



















