கல்குவாரி விபத்தில் 8 பேர் பலியான சோகம்

by Staff / 15-11-2022 12:09:07pm
கல்குவாரி விபத்தில் 8 பேர் பலியான சோகம்

மிசோரமில் நத்தியால் மாவட்டத்தில் மவ்தார் கிராமத்தில் தனியார் நிறுவனத்தின் கல்குவாரி ஒன்று இயங்கி வருகிறது. இந்த குவாரியில் பணியில் ஈடுபட்டிருந்தபோது, திடீரென குவாரியில் கற்கள் அதிகளவில் சரிந்து விழுந்துள்ளன. இந்த சம்பவத்தில் 12 தொழிலாளர்கள் சிக்கி கொண்டனர். சம்பவ இடத்திற்கு வந்த தேசிய பேரிடர் மீட்பு படையினர் இன்று காலை அந்த பகுதிக்கு சென்று மீட்பு பணியை தொடங்கியது. இரண்டு அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் அடங்கிய அந்த குழு இதுவரை, விபத்தில் சிக்கி உயிரிழந்த 8 தொழிலாளர்களின் உடல்களை மீட்டன. எனினும், மீதமுள்ள 4 தொழிலாளர்களை காணவில்லை.

 

Tags :

Share via

More stories