144 வாகனங்கள் பறிமுதல்

சேலம் மாவட்டத்தில் கடந்த மாதம் வட்டாரப் போக்குவரத்து துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் விதிமுறைகளை மீறி வாகனங்களை இயக்கியவர்களிடமிருந்து ரூ. 20. 63 லட்சம் அபராதம் வசூல், வரியாக 25 லட்ச ரூபாய் வசூலிக்கப்பட்டது. தகுதி சான்று இல்லாமல் இயக்கியது, அதிக பாரம் ஏற்றி வந்த லாரிகள், பர்மிட் இல்லாமல் இயக்கியது உள்ளிட்ட காரணங்களுக்காக 144 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Tags :