9 மாவட்ட ஊராட்சி தலைவர் பதவிகளை கைப்பற்றிய தி.மு.க.,

by Editor / 23-10-2021 08:25:33pm
9 மாவட்ட ஊராட்சி தலைவர் பதவிகளை  கைப்பற்றிய தி.மு.க.,

மாவட்ட ஊராட்சி தலைவர் பதவிக்கான தேர்தலில், அனைத்து இடங்களிலும் தி.மு.க., வெற்றி பெற்றது.9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் சமீபத்தில் தேர்தல் நடந்து முடிந்தது. இதனையடுத்து நேற்று மாவட்ட ஊராட்சி தலைவர், துணை தலைவர், ஒன்றிய தலைவர், ஒன்றிய துணைத்தலைவர் பதவிகளுக்கு நேற்று மறைமுக தேர்தல் நடந்து முடிந்தது.இது தொடர்பாக மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: 9 மாவட்ட ஊராட்சி தலைவர் பதவிக்கான தேர்தலில், அனைத்து ஊராட்சிகளிலும் தி.மு.க., வெற்றி பெற்றது.

துணை தலைவர் பதவிக்கான தேர்தலில், தி.மு.க.,-6, காங்கிரஸ் - 2, விடுதலை சிறுத்தைகள் ஒரு இடத்திலும் வெற்றி பெற்றது.மொத்தம் உள்ள 73 ஊராட்சி ஒன்றிய தலைவர் பதவிக்கான தேர்தலில் தி.மு.க., 68லும், அ.தி.மு.க., மற்றும் ம.தி.மு.க., தலா ஒரு இடத்திலும் வெற்றி பெற்றன. எஞ்சிய 3 இடங்களுக்கு தேர்தல் நடக்கவில்லை.ஊராட்சி ஒன்றிய குழு துணை தலைவர் பதவிக்கான தேர்தலில், தி.மு.க.,-62, காங்கிரஸ்-3, அ.தி.மு.க.,-1 சுயேட்சை -2 இடங்களிலும் வெற்றி பெற்றனர். எஞ்சிய 5 இடங்களுக்கு தேர்தல் நடக்கவில்லை. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது

 

Tags :

Share via

More stories

Logo