பிரதமர் மோடி  புதிய விமான முனையத்தை திறந்து வைத்து ரூ.4,800 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைக்கிறார்

by Staff / 26-07-2025 07:43:58am
 பிரதமர் மோடி  புதிய விமான முனையத்தை திறந்து வைத்து ரூ.4,800 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைக்கிறார்

பிரதமர் மோடி இன்று 2 நாள் பயணமாக  (ஜூலை 26) தமிழகம் வருகை தருகிறார். மாலத்தீவில் இருந்து தனி விமானம் மூலம் இன்று இரவு 7.50 மணிக்கு தூத்துக்குடி வரும் அவர், விமான நிலையத்தில் 452-கோடி ரூபாய் மதிப்பீட்டில் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ள  புதிய முனையத்தை திறந்து வைத்து ரூ.4,800 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைக்கிறார்.பாதுக்காப்பு பணிக்காக தூத்துக்குடி, நெல்லை,தென்காசி, கன்னியாகுமரி, விருதுநகர்,மதுரை, சிவகங்கை,தேனி,கோவை,கடலூர்,உள்ளிட்ட 11-மாவட்டங்களை சார்ந்த சுமார் 2100-போலீசார் தூத்துக்குடியில் பாதுகாப்பு பணியில்   ஈடுபட்டுள்ளனர். நாளை (ஜூலை 27) அரியலூர் கங்கைகொண்ட சோழபுரத்தில் நடைபெறும் ஆடித் திருவாதிரை விழாவில் கலந்துகொள்கிறார்.

 

Tags : PM Modi inaugurates new airport terminal, launches projects worth Rs 4,800 crore

Share via