போக்குவரத்து தொழிலாளர்களுடான நாளை பேச்சுவார்த்தை

by Staff / 18-01-2024 02:00:08pm
போக்குவரத்து தொழிலாளர்களுடான நாளை பேச்சுவார்த்தை

போக்குவரத்து தொழிலாளர்களுடான நாளை பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது என போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். கடலூர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஆஜரான பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், போக்குவரத்து தொழிலாளர்களுடான பேச்சுவார்த்தைக்கு பிறகு முக்கிய முடிவுகள் எடுக்கப்படும். ஒரு வாரத்திற்குள் சிறப்பு கூட்டத்தில் அதிகாரிகளுடன் ஆலோசிக்கப்பட்டு கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் இருந்து பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பொங்கல் பண்டிகைக்கு முன்பு, தமிழகம் முழுவதும் போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via

More stories