இருண்ட காலத்திலிருந்து இந்தியாவை மீட்டெடுப்போம் - முதலமைச்சர் கடிதம்

by Staff / 18-01-2024 02:11:42pm
இருண்ட காலத்திலிருந்து இந்தியாவை மீட்டெடுப்போம் - முதலமைச்சர் கடிதம்

ஜனநாயகத்தின் இருண்ட காலத்திலிருந்து இந்தியாவை மீட்டெடுப்போம்; விடுதலை வெளிச்சம் நிறைந்த காலத்தை காண முன்னெடுப்புகளை 'இந்தியா' கூட்டணி தொடங்கியுள்ளது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திமுக இளைஞரி மாநாடு தொடர்பாக தொண்டர்களுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், '10 ஆண்டுகால மத்திய பாஜக ஆட்சியில் மாநிலங்களின் உரிமைகள் பலவும் பறிபோய்விட்டன. திமுக இளைஞரணி மாநாடு ஒளிமிகுந்த, புது வரலாற்றை படைக்கட்டும்; சேலம் மாநகரில் ஜன.21ல் மிகுந்த எழுச்சியுடன் திமுக இளைஞரணி மாநாடு நடைபெறவுள்ளது. நான் வளர்த்து ஆளாக்கிய அணியின் இரண்டாவது மாநில மாநாட்டில் பங்கேற்பதில் ஒரு தாயின் உணர்வுடன் பெருமிதம் கொள்கிறேன்' என கூறியுள்ளார்.

 

Tags :

Share via
Logo