குடியிருப்பு கட்டிடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் ஒன்பது பேர் உயிரிழந்துள்ளனர்.
டெல்லியில் விவேக் விகார் பகுதியில் ஒரு குடியிருப்பு கட்டிடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் ஒன்பது பேர் உயிரிழந்துள்ளனர். அடுக்குமாடி குடியிருப்பின் கீழ் தளத்தில் அதிகாலை 3 48 மணி அளவில் ஏசியில் ஏற்பட்ட மின்கசுவின் காரணமாக விபத்து நடந்திருக்கலாம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. நான்கு மாடி கட்டடத்தில் வேகமாக தீ பற்றி அதன் காரணமாக ஒன்பது பேர் உடல் கருகி இறந்துள்ளனர். 14க்கு மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் 80 க்கு அதிகமான மீட்பு பணி வீரர்கள் தீயை ஒரு வழியாக கட்டுப்பாட்டிற்கு கொண்டு வந்தனர். கட்டிடத்தின் பிற பகுதிகளில் சிக்கியிருந்த 10 முதல் 15 பேர் ஏணி மூலமாக பத்திரமாக மீட்கப்பட்டனர். தீக்காயம் அடைந்து உயிர் தப்பிய இருவர் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Tags :


















