வாசலில் BAN கோலம்;கூரையில் கருப்புக்கொடி!
மக்களின் தொடர் போராட்டத்திற்கு பின்னர், துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு பின்னர் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை இழுத்து மூடப்பட்டது. தற்போது கொரோனா இரண்டாவது அலையின் தீவிரத்தில் இருக்கும் ஆக்சிஜன் பற்றாக்குறையை பயன்படுத்திக்கொண்டு ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்ஸிஜனை தயாரிக்க அனுமதிக்க வேண்டுமென்று ஸ்டெர்லைட் ஆலையின் வேதாந்தா நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் கோரியது.
இதையடுத்து ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்ஸிஜன் தயாரிக்க தமிழக அரசு அனுமதிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அழுத்தம் கொடுத்தது. உச்ச நீதிமன்றம் கொடுத்த அழுத்தத்தினால் தூத்துக்குடி மக்களிடம் ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் தயாரிக்க அனுமதி அளிப்பது சம்பந்தமாக மாவட்ட ஆட்சியர் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் அனைத்து தரப்பு மக்களும் ஸ்டெர்லைட் ஆலை திறந்து ஆக்ஸிஜன் தயாரிக்க எதிர்ப்பு தெரிவித்தனர். மக்களின் இந்த எதிர்ப்பை உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்தது. ஆனாலும் உச்ச நீதிமன்றம் அதை ஏற்கவில்லை. ஆக்ஸிஜன் தயாரிக்க ஸ்டெர்லைட் ஆலைக்கு அனுமதி அளிக்க வேண்டும். இல்லையென்றால் தமிழக அரசே ஸ்டெர்லைட் ஆலையை ஏற்று நடத்த வேண்டும் என்று கறார் காட்டியது.
இதை அடுத்து வேறு வழியின்றி அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி முதல்வர் ஆலோசனை நடத்தினார். அந்தக் கூட்டத்தில், தற்காலிகமாக அதாவது நான்கு மாதங்களுக்கு மட்டும் ஆக்சிஜன் தயாரிக்க ஸ்டெர்லைட் ஆலைக்கு அனுமதி அளித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்தை பிரமாண பத்திரமாக உச்ச நீதிமன்றத்திலும் தாக்கல் செய்தது தமிழக அரசு. இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் தயாரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தூத்துக்குடி மக்கள் இன்றைக்கு கருப்பு தினமாக அனுசரிக்கின்றனர். இதை அடுத்து ஒவ்வொரு வீட்டின் கூரையிலும் கருப்புக்கொடி கட்டியிருக்கின்றனர். ஒவ்வொரு வீட்டின் வாசலிலும் BAN ஸ்டெர்லைட் என்று கோலமிட்டுள்ளனர். இதனால் தூத்துக்குடியில் பரபரப்பும் பதற்றமும் நிலவுகிறது.

Tags :