100-வது பிறந்த நாளை கொண்டாடிய மதுரை மருத்துவமனையின் முதல் பெண் மருத்துவர்

by Editor / 29-04-2021 09:27:55am
100-வது பிறந்த நாளை  கொண்டாடிய மதுரை  மருத்துவமனையின் முதல் பெண் மருத்துவர்

மதுரை ஜெய்ஹிந்த்புரத்தைச் சேர்ந்தவர் ஆர். பத்மாவதி. இவர் 27.4.1921-ம் ஆண்டு பிறந்தார். 1950-ம் ஆண்டு அப்போதைய மதுரை நகராட்சியின் முதல் பெண் மருத்துவராக பணியில் சேர்ந்த பெருமைக்கு உரியவர்.

இவருக்கு 3 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். 8 பேரக்குழந்தைகள், நான்கு கொள்ளுப் பேரக்குழந் தைகள் உள்ளனர். தற்போது மூத்த மகனும், மருத்துவருமான ஆர்.குருசுந்தருடன் வசித்து வருகி றார். மற்ற மகன்கள், மகள் சென் னையில் வசிக்கின்றனர்.

பத்மாவதி தனது 100-வது பிறந்த நாளை தனது குழந்தைகள், பேரக்குழந்தைகள், கொள்ளுப் பேரக்குழந்தைகள் மற்றும் உற வினர்களுடன் கொண்டாடத் திட்டமிட்டிருந்தார். ஆனால், கரோனா கட்டுப்பாடுகளால் அவர் களுடன் ஒன்றாக கொண்டாட முடியவில்லை. இதனால் வீட்டில் கடந்த 27-ம் தேதி எளிமையாக 'கேக்' வெட்டி கொண்டாடினார்.

பத்மாவதி, மதுரை மருத்துவக் கல்லூரியில் 1949-ம் ஆண்டு எம்பிபிஎஸ் முடித்துள்ளார். படித்து முடித்ததும் கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் பணி கிடைத்தது. பின்னர், அங்கிருந்து மதுரைக்கு இடமாறுதலாகி அப் போதைய மதுரை நகராட்சி மருத்துவமனையில் முதல் பெண் மருத்துவராக பணியில் சேர்ந்தார். மகப்பேறு மருத்துவராக எண் ணிலடங்கா பிரசவம் பார்த்து, பணிக் காலத்தில் பாராட்டுகளை பெற்றுள்ளார்.

மாநகராட்சி மருத்துவமனை கண்காணிப்பாளராக பதவி உயர்வு பெற்று, தற்போது மதுரையின் அனைத்து பகுதிகளிலும் மாந கராட்சி மருத்துவமனைகள் இருப் பதற்கு அடித்தளமாக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளார்.

இதுகுறித்து பத்மாவதியின் மூத்த மகன் டாக்டர் ஆர்.குரு சுந்தர் கூறியதாவது: மதுரை மாநகராட்சி மருத்துவமனை கண் காணிப்பாளராக எனது தாயார் பணிபுரிந்தபோது, ஒவ்வொரு பகுதிக்கும் மருத்துவமனை வர வேண்டும் என்பதற்காக முயற்சி மேற்கொண்டார். 100 வயதா னாலும் ஆரோக்கியமாகவும், தெளிவான பார்வையுடனும் இரு க்கிறார். தற்போது கூட சிக்கலான பிரசவங்களுக்கு மகப்பேறு மருத்துவரான எனது மனைவி அவரிடம்தான் ஆலோசனை கேட்பார்.

இந்த வயதிலும் அவர் நேரத் துக்குச் சாப்பிடுவார். காலை 8.30 மணிக்கு டிபன், பிற்பகல் 12.30 மணிக்கு மதிய உணவு, இரவு 7.30 மணிக்கு டிபன் சாப்பிடுவார். அவருக்கென பிரத்தியேக உணவு தருவதில்லை. நாங்கள் சாப்பிடும் உணவைத்தான் சாப்பிடுகிறார்.

இதுதான் அவரது உடல் ஆரோ க்கியத்துக்கு முக்கிய காரணம் என்று நினைக்கிறோம். மகாத்மா காந்தி மீது அதிக ஈடுபாடு கொண்டவர்.

டிவி பார்ப்பது, புத்தகங்கள் படிப்பது அவரது தற்போதைய பொழுதுபோக்கு.

அவர் மாநகராட்சி மருத்துவ மனையில் பணிபுரிந்த 1969-ம் ஆண்டில் உலக சுகாதார நிறுவ னம், இந்தியாவில் இருந்து 3 மருத்துவர்களை தேர்வு செய்து போலந்து நாட்டில் நடந்த சர்வதேச மகப்பேறு மற்றும் குழந்தைகள் நல கருத்தரங்குக்கு சிறப்பு விருந் தினராக அழைத்திருந்தது. அதில் எனது தாயாரும் ஒருவர்.

எனது தாத்தாவும் மருத்துவர்தான். அவர் மருத்துவராக பணிபுரிந்த காலத்தில் பெண்கள் ஆண் மருத்து வர்களிடம் சிகிச்சைக்கு செல்ல தயங்கினராம். அதனால் நோயால் கஷ்டப்பட்டாலும் சிகிச்சைக்கு வரவே மாட்டார்களாம். அதனால் குடும்பத்தினர் எதிர்ப்பை மீறி எனது தாத்தா அம்மாவை மருத்துவம் படிக்க வைத்தார். தற்போது நான், எனது மனைவி, எனது சகோதரி மருத்துவர்களாக உள்ளோம். மற்ற 2 சகோதரர்கள் பொறியாளராகவும், பட்டயக் கணக்காளராகவும் உள்ளனர் என்றார்.

Tags :

Share via