காதலி தற்கொலையை வீடியோ காலில் ரசித்த காதலன்

by Staff / 21-04-2023 01:30:46pm
காதலி தற்கொலையை வீடியோ காலில் ரசித்த காதலன்

மருதூரைச் சேர்ந்தவர் அர்ச்சனா (24). இவர் நன்னிலத்தில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். கடந்த 12ஆம் தேதி வீட்டில், மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதனையடுத்து, காதலன் சத்யராஜ் (26)-ஐ போலீசார் கைது செய்தனர். கடந்த இரண்டு வருடமாக அர்ச்சனாவை காதலித்து வந்த நிலையில், திடீரென உறவுக்கார பெண் ஒருவருடன் சத்யராஜுக்கு காதல் ஏற்பட்டதால், இருவருக்குமிடையே சண்டை நடந்துள்ளது. அர்ச்சனா தற்கொலை செய்யும் முன் சத்யராஜுடன் செல்போனில் பேசியுள்ளார். அப்போது சத்யராஜ் 'நீ தொலைந்து விடு' என்று கூறியதோடு, வீடியோ கால் வந்த அர்ச்சனா தூக்கு போடுவதை பார்த்து ரசித்துள்ளார்.

 

Tags :

Share via

More stories