கஞ்சா விற்ற 2 பேர் கைது

by Staff / 20-05-2023 12:43:47pm
கஞ்சா விற்ற 2 பேர் கைது

நித்திரவிளை அருகே பாலாமடம் என்ற பகுதியில் கஞ்சா விற்பனை நடப்பதாக நித்திரவிளை போலிசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதை அடுத்து சம்பவ இடத்திற்கு சப் இன்ஸ்பெக்டர் ஞானசிகாமணி மற்றும் போலீசார் சென்று அந்தப் பகுதியில் சோதனை நடத்தினர்.
அப்போது பைக்கில் சந்தேகப்படும்படியாக இருந்த இரண்டு வாலிபர்களை பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில் பைக்கில் வைத்திருந்த கவரில் 4 கிராம் எடை உள்ள மூன்று கஞ்சா பொட்டலங்கள் இருந்துள்ளது. இதை கேரளாவில் இருந்து வாங்கி வந்து, இங்குள்ள இளம் சிறார்களுக்கு விற்பனை செய்வது தெரிய வந்தது.இதையடுத்து கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்து, நித்திரவிளை போலீசார் வழக்கு பதிவு செய்து, கஞ்சா வைத்திருந்த கொல்லங்கோடு அருகேயுள்ள மஞ்சதோப்பு பகுதியை சேர்ந்த ரோஜர் ஸ்டெயின் ( 24), நித்திரவிளை ஆற்றுப்புறம் பகுதியை சேர்ந்த லிபின் (21), ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

 

Tags :

Share via

More stories