கொரோனா நிவாரணம்:  13 மளிகை பொருட்கள்   வழங்க தமிழக அரசு முடிவு 

by Editor / 13-05-2021 07:43:13pm
கொரோனா நிவாரணம்:  13 மளிகை பொருட்கள்   வழங்க தமிழக அரசு முடிவு 



கொரோனா நிவாரணமாக 13 மளிகை பொருட்களை  தமிழக அரசு வழங்க முடிவு செய்துள்ளாது.
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பரவல் அதிகரித்துவருகிறது. அதன்படி தினசரி கொரோனா பாதிப்பு 30 ஆயிரத்தை தாண்டியது. கொரோனாவால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் 300ஐ நெருங்கியுள்ளது. கொரோனா இரண்டாம் அலையை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. அதன்படி, மே 24 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, நிவாரணமாக 4000 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என அறிவித்துள்ளது.
இந்நிலையில் கொரோனா நிவாரணமாக 13 வகை பொருள்கள் வழங்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது. கோதுமை, உப்பு, ரவை, பருப்பு உள்ளிட்ட 13 வகை பொருள்கள் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. 2,11,12,798 குடும்பங்கள் பயன்பெறும் வகையில் மளிகை பொருட்கள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, இந்த தொகுப்பு வரும் ஜூன் மாதம் 3 ஆம் தேதி கருணாநிதி பிறந்த நாளன்று வழங்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

Tags :

Share via