நண்பர் வீட்டுக்கு மது அருந்த சென்ற இளைஞர் கொடூர கொலை

கரூர்: நண்பர் வீட்டுக்கு மது அருந்த சென்ற இளைஞர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பசுமதிபாளையத்தை சேர்ந்த கண்ணன், தனது வீட்டில் நண்பரான ஆசைத்தம்பியுடன் நேற்றிரவு மது அருந்திவிட்டு உறங்கியுள்ளார். கண்ணன் காலையில் கண் விழித்து பார்த்தபோது, ஆசைத்தம்பி மார்பில் கத்தியால் குத்தப்பட்டு இறந்து கிடந்துள்ளார். இதையடுத்து, வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், கண்ணனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags :