தென் மாவட்டங்களில் பறிமுதல் செய்த  சுமார் 3 கோடி மதிப்புள்ள 1211 கிலோ கஞ்சா தீயிலிட்டு அழிப்பு..

by Staff / 27-03-2023 03:37:59pm
தென் மாவட்டங்களில் பறிமுதல் செய்த  சுமார் 3 கோடி மதிப்புள்ள 1211 கிலோ கஞ்சா தீயிலிட்டு அழிப்பு..

தென் மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, மதுரை, விருதுநகர், திண்டுக்கல், தேனி ஆகிய மாவட்டங்களில் கஞ்சா வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளிடமிருந்து  பறிமுதல் செய்யப்பட்ட சுமார் 3 கோடி மதிப்புள்ள 1211 கிலோ கஞ்சா  காவல்துறை கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டிருந்தது. மேற்படி பறிமுதல்  செய்யப்பட்ட கஞ்சாவை அழிக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.
அதன்பேரில் இன்று 27.03.2023 மேற்படி பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவை  தென் மண்டல் காவல்துறை தலைவர் அஸ்ரா கார்க் அறிவுரையின்படி திருநெல்வேலி சரக காவல்துறை துணை தலைவர் பிரவேஷ்குமார், தலைமையில் தென் மண்டல கஞ்சா ஒழிப்பு கமிட்டி மெம்பர் திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணன்,மதுரை மாநகர துணை ஆணையாளர் சாய் பிரனிஷ் மற்றும் நடமாடும் தடய அறிவியல் சோதனை மையம் வித்யாராணி ஆகியோர் முன்னிலையில்  திருநெல்வேலி மாவட்டம் விஜயநாராயணம் காவல் நிலைய  சரகத்திற்குட்பட்ட பாப்பாங்குளம் கிராமம் பொத்தையடியில் உள்ள ASETIC Systems BMWM என்ற தனியார் நிறுவனத்தில் வைத்து மேற்படி 1211 கிலோ கஞ்சா எரியும்  தீயிலிட்டு அழிக்கப்பட்டது.அப்போது மேற்படி கஞ்சா வழக்கின் சம்மந்தப்பட்ட புலன்விசாரணை அதிகாரிகள் மற்றும் போலீசார் உடனிருந்தனர்.

தென் மாவட்டங்களில் பறிமுதல் செய்த  சுமார் 3 கோடி மதிப்புள்ள 1211 கிலோ கஞ்சா தீயிலிட்டு அழிப்பு..
 

Tags :

Share via