செங்கோட்டையன் அதிமுக-வில் இருந்து நீக்கம் பட்டாசு வெடித்து கொண்டாடிய அதிமுகவினர்.
அதிமுக-வில் இருந்து செங்கோட்டையனை அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (அக்.31) நீக்கினார். இந்ந முடிவை வரவேற்று, ஈரோடு மாவட்டத்தில் உள்ள மொடக்குறிச்சி அதிமுக தொண்டர்கள், பட்டாசு வெடித்து கொண்டாடியுள்ளனர். கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் செங்கோட்டையனை, இபிஎஸ் நீக்கியுள்ளார். இதற்கு, அதிமுகவினர் தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.
Tags : செங்கோட்டையன் அதிமுக-வில் இருந்து நீக்கம் பட்டாசு வெடித்து கொண்டாடிய அதிமுகவினர்



















