ஏப்ரல் 10-ந்தேதி முதல் பூஜை, பிரசாத கட்டணங்கள் உயர்வு
கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடைபெறும் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு திருவிழாக்களுக்கு நாடு முழுவதிலும் இருந்து பக்தர்கள் வருவார்கள்.
கோவிலுக்கு வரும் பக்தர்கள் ஐயப்பனுக்கு விஷேச பூஜைகள் செய்ய இங்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்த கட்டணங்களையும், கோவிலில் விற்கப்படும் பிரசாதங்களின் விலையையும் உயர்த்த கோவில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் பக்தர்கள் மேற்கொள்ளும் படி பூஜை, களபாபிஷேகத்திற்கான கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளது.
படி பூஜை ரூ.1,37,900 (பழைய கட்டணம் ரூ.1,15,000) சகஸ்ரகலசம் ரூ. 91,250(80,000), உதயாஸ்தமன பூஜை ரூ61,800 (50,000), உற்சவபலி ரூ. 37,500(30,000) களபாபிஷேகம் ரூ.38,400 (22,500), தங்க அங்கி சார்த்துதல் ரூ.15,000(10,000) புஷ்பாபிஷேகம் ரூ.12,500 (10,000) சதகலசம் ரூ.12,500 (10,000),
அஷ்டாபிஷேகம் ரூ.6,000(5,000), உச்ச பூஜை ரூ.3,000 (2,500), பகவதி சேவை ரூ.2,500(2,000), உஷ பூஜை ரூ.1,500(1000), கணபதி ஹோமம், ரூ.375 (300),
கெட்டு நிறைத்தல் ரூ.300(250), அபிஷேக நெய்(100 மி.லி), ரூ.100(75), நீராஞ்சனம் ரூ.125(100), அரவணை ரூ.100(80), அப்பம் 1 பாக்கெட் ரூ.45(35).
இந்த கட்டண உயர்வு சித்திரை விஷூ பூஜைகளுக்காக நடை திறக்கப்படும் ஏப்ரல் 10 முதல் அமலுக்கு வரும் என்று திருவிதாங்கூர் தேவசம்போர்டு அறிவித்து உள்ளது.
Tags :



















